பரிணாம வளர்ச்சியில் புரட்சி புத்தகம்
பிரபஞ்சத்தின் பரிதியாகி
ககனமெங்கும் தாரகையாகி
எட்டுத்திக்கும் அரலையாகி !!!
அழகிலே முழுமதியாகி
பொதிகையின் தென்றலாகி
கமழும் செந்தமிழை !!!
காலன் கரையானாகி
சுவடிகளைச் சுவைத்து
கல்வெட்டுகளை செல்லரித்தான் !!!
கணினியின் படையெடுப்பில்
கரங்களும் கண்களும்
ஏடுகளை விடுத்த நேரத்திலே !!!
வலைதளமொன்று தமிழிலே
வடிவமைத்து தாய்மொழிக்கு
வள்ளலான ராஜேஷ் அண்ணா !!!
நீ வான் புகழ் வாகைச்சூடி
வையகம் போற்ற வலம்
வருவாய் தரணியெங்கும் !!!
மொழித் தொண்டாற்றும் உனை
வாழ்த்த வார்த்தையேது வயதேது
வாழையடி வாழையாக நீ வாழி !!!
கவிஞர்களும் கற்பனைகளும்
தமிழுள்ளங்களும் சங்கமிக்கும்
முக்கூடலான எழுத்து தளமே !!!
கவித் தமிழின் சொர்க்கமே
கன்னமிருந்தால் எழுத்து தளமே
கட்டியணைத்து முத்தமிடுவேன் உனை !!!
தளமே நீ வளர்க
தமிழே நீ வாழ்க
தமிழன்னை ஆசிர்வதிப்பாள்
தமிழன் ராஜேஷ் அண்ணாவை !!!
தளம் அமைத்து தமிழ் பணி செய்யும் திரு.ராஜேஷ்குமார் அண்ணா அவர்களுக்கும் எழுத்து தளத்துக்கும் சமர்ப்பணம். அண்ணா நீங்களும் உங்களது சந்ததியும் எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ்வீர்கள்.என் சார்பாகவும் மற்றும் எழுத்து நட்புக்கள் சார்பாகவும் இதனை இந்த கவிதை மூலம் தெரிவித்து கொள்கிறேன்
அன்புடன்
சுதா