பெரிய கவிஞ்சரு......!!!

பனி போர்த்திய அதிகாலை
உதிக்க காத்திருக்கும் சூரியன்
ஈரமான தார் சாலை
எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்குகள்
நெருப்பை மூட்டி குளிர்காயும் சிறுவர்கள்
ஊதுபத்தி வாசனையுடன் என்னை
கடந்து போகும் ஆட்டோ........

இவைகளை ரசித்தபடியே
உனக்கு பிடிக்காத சிகெரெட்டை பிடித்தபடி
ஒரு கோப்பை தேநீர் குடிக்க
ஒதுங்கினேன் உனக்கு பிடித்த
"பூங்காற்றிலே உன் சுவாசத்தை" பாடல்
ஒலித்துக் கொண்டிருக்கும் கடையில்.......

எங்கே இருக்கிறாய் ? என
நீ எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில்
புகைப்பதை மட்டும் கூறாமல்
மற்றபடி ரசித்தது முதல்
கடையில் நிற்ப்பது வரை அத்தனையும்
உனக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.......

மறுபடி, உன் குறுஞ்செய்தி
சிகரெட் பிடிக்கிறாயா?
"ச்சீ" "ச்சீ" இல்லவே இல்லை
என அனுப்பும் போதே பக்கென்றது.......

இப்பொழுது நீயே அழைத்தாய்
"Darling " Calling .......
நான் : ஹலோ...!!! குட் மார்னிங்
நீ : தம் அடிச்சியா இல்லையா ?
டெரராக உன் குரல்
நான் : நான் தான் இல்லன்னு...
சொல்லி முடிக்கும் முன்பே
கட் செய்து விட்டாய்

மறுபடி, உன் குறுஞ்செய்தி
பெரிய கவிஞ்சரு,
ரசிச்சதை எல்லாம் msg அனுப்புறாரு
எதை எல்லாம் ரசித்தாய் ?
ஊதுபத்தி வாசனையுடன்
கடந்து போகும் ஆட்டோ வா ???
நீ விட்ட புகைய பார்த்துகிட்டே
அந்த ஆட்டோ வுல தான்டா
இப்ப உன்ன கிராஸ் பண்ணி போனேன்
உன்ன வந்து வச்சிக்கிறேன் இரு....

எல்லாம் முடிந்து விட்டது
இன்னைக்கு கச்சேரி உண்டு
வேற வழியே இல்ல
SWITCHED OFF .......


எழுதியவர் : Jaisee .....!!! (2-Jan-11, 7:40 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 761

மேலே