ஆனாலும் நான் கவிஞன் !!

தமிழ் முகத்தை அறிவேன் -அதன்
இலக்கணம் அகத்தை அறியேன்
அஞ்சாமல் சொல்கிறேன்
ஆனாலும் நான் கவிஞன் !

பைந்தமிழ் இலக்கணம்
ஐந்தாம் ! நான் அறியேன்

அ முதல் ஒள வரை
உயிரெழத்தாம்.
நான் அறிவேன் -அதில்
குறில் , நெடில்
இரண்டு வகையாம்
நான் அறியேன் !

க் முதல் ன் வரை
மெய்யெழுத்தாம்
நான் அறிவேன்-அதில்
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
மூன்று வகையாம்
நான் அறியேன் !
அச்சமில்லாமல் சொல்கிறேன்
ஆனாலும் நான் கவிஞன் !

தனித்து நின்று
தொடர்ந்து நின்று
பொருள தரும்
எழுத்துகள் சொல்லாம்.
நான் அறிவேன் . அதில்
பெயர்ச்சொல் எது ?
வினைச்சொல் எது ?
இடைச்சொல் எது ?
உரிச்சொல் எது ?
நான் அறியேன் ! –
அசராமல் சொல்கிறேன் –
ஆனாலும் நான் கவிஞன் !

அகப்பொருள் எது
புறப்பொருள் எது
நான் அறிவேன் – அதில்
”இன்பம்” பேறு எதில் ?
நான் அறியேன் !
ஆனாலும் நான் கவிஞன் !

எழுத்து,அசை,சீர்
தளை, அடி, தொடை
யாவும் இவை
யாப்பாம் !
நான் அறிவேன் –அதில்
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா என
பா வை நான்காம்
நான் அறியேன் !
அழுத்தமாக சொல்கிறேன்
ஆனாலும் நான் கவிஞன் !

சொல்லழுகு, பொருளழுகு
என வரையறுப்பது
அணி இலக்கணமாம்.
நான் அறிவேன் –அதில்
தன்மையணி
உவமையணி
உருவக அணி
பின்வருநிலையணி
தற்குறிப்பேற்ற அணி
வஞ்சப் புகழ்ச்சியணி
வேற்றுமை அணி
இல்பொருள் உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
இரட்டுறமொழிதலணி
என பத்து வகையாம்
நான் அறியேன் !
அகங்காரத்தோடு சொல்கிறேன்
ஆனாலும் நான் கவிஞன் !



----------------------------- இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (19-Sep-13, 8:18 pm)
பார்வை : 287

மேலே