எங்கே போனாய்!

எப்போது புரிந்து கொள்வாய்
என் காதல் ரணங்களை...
தினமும் கழுவில் ஏற்றிக்கொண்டு தான்
இருக்கிறேன் என் இரவுகளை...

உன்னை தேடித்தவிக்கும் என் கண்கள்
ஓய்வெடுக்க மறுக்கிறது...
மனமோ! பிதற்றிக்கொண்டு தான் இருக்கிறது...

உண்ட மயக்கம் அல்ல உறங்குவதற்கு!
கண்ட மயக்கம் அல்ல கவி பாடுவதற்கு!
சென்ற மயக்கம் அல்ல இளைப்பாறுவதற்கு!
ஏதோ ஒரு மயக்கம் உன்னை தேடித்தேடி...

உன்னை காணாமல் உறங்க..
ஏனோ ஒரு பயம்!
எங்கே என் இதயம் நின்று விடுமோ என்று!...

ஏமாற்றி செல்கின்றன ஒவ்வொரு விடியலும்
எப்போது வருவாய் நீ
என் சுவாசக்காற்றை...

புகைப்படம் காட்டி
ஆறுதல் சொல்ல முடியவில்லை
என் கண்களுக்கு...

தேற்ற முடியவில்லை
விம்மி அழும் என் மனதை...

வினா ஒன்று எழுந்து
மௌன பதில் கொண்டு அடங்கிவிடுகிறது...

முகம் காட்ட மறுக்கும் குறிஞ்சி மலரா நீ!
தினம் பூக்கும் பூவல்லவா நீ!

திரை கடல் தாண்டி சென்றாயா...
என் கண்களை
மணல் கொண்டு மூடச்செய்தாயா...

எங்கே சென்றாய் என்னை விட்டு!
நாட்களின் நீளம் அதிகம் ஆகுதே!

மண்ணில் விழப்போகிறேன்
மடி கொண்டு வா!
என் உயிராவது
ஏமாறாமல் போகட்டும்!!!

எழுதியவர் : Thavam (3-Jan-11, 10:02 am)
பார்வை : 696

மேலே