நீ தொலைந்த இடம்
தொலைத்ததை
தேடு முன்
தொலைந்த இடத்தை தேடு ...!
நீ
தொலைந்திருந்தால்
முதலில் மூவரிடம் தேடிப்பார் ..
காதலியிடமா .....?
மனைவியிடமா..?
மாற்றாளிடமா ......?
நீ
தொலைத்த இடமெது
நீ
தொலைந்த இடமெது ...?
நீ
வாலிபத்தில்
தொலைந்திருந்தால்
உன்னைக்காதலியிடம் தேடு ...!
நீ மட்டுமே
தொலைந்திருந்தால்
மனைவியிடம் தேடு ...!
உன் வம்சமே
தொலைந்திருந்தால்
மாற்றாளிடம் தேடு ...!
நீ
தொலைந்த இடமெது ..?
உன்னில்
நீயே
தொலைந்திருந்தால்
ஞானி ஆகியிருப்பாய் ...!
நீ
நீயாகவே இருப்பதால்
தொலைத்த இடத்தை தேடு
உன்னை
அங்கு கண்டெடுப்பாய் ...!