விசுவநாதன் வேலை வேண்டும்
காசி விஸ்வநாதருக்கு
தங்கக் கிரிடம் சூட்ட
பெற்றார்கள் இலவசமாக
பவுனும் நகையும் எக்கச்சக்கமாக
பெண்மணிகள் அள்ளிக் கொடுக்க
ஊர் ஊராக ஊர்வலமாக
கிரிடத்தை கொண்டு செல்ல
பாதி இறைவனுக்கு படைத்தது
மீதி பதவியில் இருப்பவர்களுக்கு.
என்று பங்கிட்டு செழிக்க
விஸ்வநாதன் கூர்மையாக பார்க்க
உண்டு பண்ணினான் கலகத்தை
கலாட்டா தொடர
நான் நீ என்று ஈஸ்வரனின்
சொத்துக்கு சண்டை நடக்க
காசி நாதன் புன்னகையுடன்
காரைக்குடியை நோக்க
மகேசன் தீர்ப்பை வழங்கும் நேரம்
அவன் ஆளுமை தெரிய வரும்
நாளை மாலையில். வெளியாகும்
தேர்தல் முடிவுகள் ஒரு துடைப்பு
இறைவனையே ஏமாற்றும் நடிப்பு
தேர்ந்தவனும் பதவி விலகுபவனும்
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
பணம் என்றால் நாணயம்
ஓடி விடும் போல்
ஆசை கண்ணைக் கட்டும்
இருப்பவனுக்கு இன்னும் வேண்டும்
இல்லாதவனுக்கு நிறைய வேண்டும்
விஸ்வநாதனின் வேலை என்ன
என்பது தெரிய வரும்.
அவனுடைய திருவிளையாட்டு திறனில்
எள்ளளவும் சந்தேகம் இல்லை
அவனுடைய நீதி வெள்ளிடைமலை
சொத்தை திண்டினவன் கை முடங்கும்
தின்னவன் வாய் புண்ணாகும்
அனுபவித்தவன் நெஞ்சு வெடிக்கும்
அடைய நினைப்பவன் அடக்கம் ஆவான்