யாரும் செய்யாததையா நான் செய்துவிட்டேன்

உனக்கு நான் என்ன தீங்கு செய்துவிட்டேன்?
என்னை ஏன் அழ வைக்கிறாய்?
உன்னை அறுக்கிறேன் என்று,
என்னை அழ வைக்கிறாயா?
ஊரில் யாரும் செய்யாததையா
நான் செய்துவிட்டேன்!
ஊரில் வாயாலயே வறுத்தெடுக்கிறார்கள் பலர்,
அந்த அறுவையை விடவா,
நான் பலமாக உன்னை அறுத்துவிட்டேன்!!
நீ கூட நாளுக்கு நாள்
விலையேறிக் கொண்டிருக்கிறாய்


அதிக பாவம் செய்யும் அனைவருமே
அடுத்த பிறவியில் உன்னைப்போலதான் பிறப்பார்கள்.
முற்பிறவி குணத்தால் அறுக்கும்போது அழவைத்தாலும்,
செய்த பாவத்தால் வதக்கும்போது
வாடித்தானே சாக நேரிடுகிறது.
நான் அறுத்த வெங்காயமான நீயும்,
எந்த பிறவியில் செய்த பாவமோ,
என்னால் இன்று வதங்குகிறாய்!!!

எழுதியவர் : வென்றான் (23-Sep-13, 1:41 am)
பார்வை : 70

மேலே