என் இதயமானவனே.

என் இதயமானவனே .
என் இதயத்தை கேட்டுப்பார் .
ஒவ்வொரு மணித்துளியும் உந்தன் நினைவில் .
நீ காற்றோடு கலந்து வந்தாய் அன்று .
நானோ நூலாக தேய்ந்து போகிறேன் இன்று.
நீ தந்த காதலோ காற்றாக போனது ஏனோ .
மழையாக நான் இங்கு கண்ணீர்ராக..
நீ தந்த காயங்களால் நானோ.
தினம் தினமும் வாடிப் போகிறேன் .
என் இதயம் எப்படி சிதைவடைகிறதோ .
தினம் தினமும் உன் அன்பான பேச்சை நினைக்கிறேன்.
ஆனந்தமாக நீ அன்று பேசிய வார்த்தைகள் .
உன்னிடம் இருந்து என்னை பாகு போட்டதோ .
என் அன்பை புரிந்து கொள்வாயா என்னவனே .
அல்லது என்னை நீ மறந்து கொண்டாயா இன்று .
நீ என்னை தேடி வரும் போது .
என் கைகள் உன்னை அணைக்க தோன்றும்.
சிறு தயக்கம் என்னால் உன்னை நெருங்க முடியுமா .
எப்படி பிரிந்த நாம். எப்படி சேர்வதோ .
நீ நினைத்து கொள்கிறாய் சில நேரங்களில் .
நான் உன்னவளாக இருப்பேனோ .
சில வேளை நீ என்னை பார்க்கும் போது .
என் இதயம் கூட நடிக்கலாம்.
என் இதயத்துக்கு இருக்கும் வலியை
நீ கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக ...
என்னவனே தினம் தினம் உன் அன்புக்காய் .
காலம் முழுவதும் காத்து இருக்கிறேன்.
கலங்காத என் இதயம்.
உன்னால் கலங்கி விட்டதே இன்று.

எழுதியவர் : (23-Sep-13, 1:45 am)
பார்வை : 56

மேலே