புதுமை துளிர்

அடம் பிடிக்கிறது குழந்தை
ஆயாவிடம் தன் மேல்
உப்பு மூட்டை ஏறச் சொல்லி ....!

மீண்டும் பெய்தது மழை
கப்பல் விடும் குழந்தைக்கு
கடல் வேண்டி ...!

புள்ளிகள் அழுகின்றன
கிறுக்கல்களைக் கண்டு
கோலமானது அவள் முகம்...!

மன்னிக்கும் வளாகத்திற்கு
குடும்ப நீதிபதி
அம்மா!

நெருப்பும் வரம் கேட்கும்
உன் காதலோடு
தன்னில் தஞ்சம் வேண்டி ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (23-Sep-13, 5:58 am)
Tanglish : puthumai thulir
பார்வை : 90

மேலே