காலம் எல்லாம் உன்னவள் ஆகிவிட.
தொட்டு விடவா உன்னை .
உன் பக்கம் வந்து விடவா .
அன்பை வைத்து விடவா .
இல்லை அள்ளி அணைத்திடவா .
கொஞ்சி பேசி விடவா .
உன் அன்பில் நான் மகிழ்ந்து விடவா .
உலகை மறந்து விடவா .
உன்னை ரசித்து கொள்ளவா.
என்னை மறந்து விடவா .
உன் தோளில் சாய்ந்து விடவா .
காலம் சுற்றி வருவது போல
நான் உன்னை சுற்றி வந்து விடவா .
அன்பை உண்மையாய் தந்து விடு .
பூவும், பொட்டும் நீ தந்து விடு.
நான் காலம் எல்லாம் உன்னவள் ஆகிவிட .
உன்னுடனே வாழ்ந்து விடவா .
என் இறுதி மூச்சு அடங்கி விடவா
உந்தன் மடியில் கண்கள் மூடி விடவா.
என் இறுதி யாத்திரை ஊர்வலத்தில்.
உன் கண்கள் கலங்கிடாமல் .
சுமங்கலியாக நான் சென்று விடவா .