இடிந்தகரையும் இடியாத மனமும்...

போராட்ட நாள் 749 வது ( 2.9.2013 ) நாள் அன்று.

செய்தித்தாள்,தொலைக்காட்சி,சமூகவலைத்தளங்களிலும் மூலம் கேட்ட பார்த்த செய்திகள் உண்மையா? ...என அறிய எங்களுக்குள் இருந்த சந்தேகங்களும் கேள்விகளுடன், அலுவலக நண்பர்களுடன் பயணித்தோம் இடிந்தகரைக்கு....

பழைய மாநாடு பந்தல் போல் காட்சித்தந்தது கீற்றுகொட்டகை.
கீற்றுகொட்டகைக்குள் போராட்ட குழுவில் பெரும்பகுதி பெண்களே...
அவர்களுடன் கைக்குழந்தைகளும் ,அவர்களின் வாழ்வியலில் கலந்துள்ள,
ஆடுகள்,கோழிகளும் போராட்ட பந்தலில்...

தொடர்ந்து இந்த போராட்டம் எப்படி நடத்த முடிகிறது? மந்திரிகள் சொல்வதுபோல் வெளிநாட்டு பணம் வருகிறதா?

யாருக்கு வேணும் பணம்? வெளிநாட்டு பணமா….! போராட்ட குழுக்களுக்கிடையே சலசலப்பும் கோபமும், பின் அவர்களுக்குள்ளே அமைதியாகி, கேள்வி எங்களுடையது மட்டுமில்லை என்பதையுணர்ந்து ஒரு அம்மா பேச ஆரம்பித்தார்கள்
இடிந்தகரை மட்டுமில்லை இதனை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களும் அணுவுலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆண்கள் பெரும்பாலும் தொழிலுக்கு (மீன் பிடிக்க) போகிறார்கள் . நாங்கள் பகலில் போராட்ட பந்தலில் இருக்கிறோம்.தொழிலுக்கு செல்லும் ஒவ்வொரு படகும் கிடைக்கிற வருமானத்தில் 10 சதவிகிதம் போராட்ட குழுவிற்கு கொடுக்கிறார்கள். இங்கு இருக்கும் ஒவ்வொருவர் மீதும் 100க்கு மேல் பொய்வழக்கு போட்டுள்ளது இந்த அரசு. இந்த வழக்குகளையும் எங்கள் வழக்கறிஞர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.,அப்புறம் எதற்கு பணம்…?

(அதற்க்குள் இன்னொரு அம்மா) பிரியாணி பொட்டலம் போட்டும், கைகாசு கொடுத்தும் ,வண்டியனுப்பியும் கூட்டம் சேர்த்து பழக்கப்பட்ட மந்திரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கண்டிப்பாக , அணுவுலைக்கு எதிரான போராட்டம் 749 வது நாட்களை கடந்து தொடர்வது வியப்பாகத்தான் இருக்கும். அவர்களைப் போல் ஊழல் பணத்தில் செலவுசெய்ய எங்களுக்கு வாய்ப்பில்லையே!

அமெரிக்கா ஏன் எங்களுக்கு பணம் தரவேண்டும்.. இந்த மந்திரிகளுக்கு கொடுத்தாலே போதுமே, பணம் கூட எதற்கு? அணு உலைத் திட்டத்தை மூடு என்று உத்தரவிட்டால் போதும்.. இந்தியா தலையாட்டி விடுமே!ஈரானில் இருந்து பெட்ரோல் வாங்க கூடாது என்று அமெரிக்கா போட்ட உத்தரவால் இந்தியாவிற்கு எவ்வளவு இழப்பு தெரியுமா.. இந்த மத்திய மாநில அரசுக்கு தெரியாமல் பணம் இந்தியாவிற்க்கு வரமுடியுமா?


அரசு இந்த திட்டத்திற்கு பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதே?

யாருக்காக அரசு? மக்களுக்காகத்தானே...
யாருக்க பணம்? ஒரு தீப்பெட்டி வாங்க ஐம்பது காசு வரி கொடுக்கிறோம்..

சுவிஸ் வங்கியிலுள்ள கருப்பு பணம்.....
ஸ்பெக்ட்ராம் ஊழல்
சேது சமுத்திர திட்டத்தில் கடலில் போட்ட பணம்
புதுசா இதையெல்லாம் விழுங்கற மாதிரி தோரியம் ஊழல்....

உலக நாடுகளே சுனாமிக்கு பிறகு படிபடியாக அணு உலையை மூடும்போது இந்த அரசு மட்டும் தரமற்ற பாகங்களை கொண்டு திறக்க நினைப்பது ஏன்?

பல வழிகளில் ஊழல் நடந்துள்ளது இந்த அணு உலைக்கு பல முறை திறப்பு விழா தேதி அமைச்சர்கள் அறிவித்து விட்டார்கள் ஆனாலும் திறக்க வில்லையே… இது அரசு மக்களை ஏமாற்ற போடும் நாடகம்…

எங்கள் வாழ்வாதாரமே கடல் தொழில்தான்.. இதை விட்டு நாஙகள் எங்கு போவோம்… பொய்யான மின் தடையை ஏற்படுத்தி தமிழகம் இருளில் மூழ்கியிருப்பது போல் காட்டி மக்களை திசை திருப்புகிறார்கள்…
அணு உலை வெடித்து விபத்துக்குள்ளானால் பாதிப்பு எங்களுக்கு மட்டுமில்லை தமிழகம் முழுவதும்தான்...
விஞ்ஞானி அகர்வால் மரணம் எதனால்?
அணு உலை விபத்துக்குள்ளானால் கடல்நீரை பயன்படுத்தலாம் என்றால்?
சுனாமியின் போது சில கிலோமீட்டர் கடல் உள்வாங்கியிருந்தது.

அணு உலையைப் பற்றி இங்கு படிக்கும் பள்ளிக்குழந்தை முதல் அனைவரும் தெரிந்துவைத்து உள்ளார்கள்..அணு உலை எவ்வாறு செயல்படுகிறது? அணு உலையைப் பற்றி உலக நாடுகளின் நிலைப்பாடு என்ன?
அணு உலையை மூடியுள்ள நாடுகள் எவை? என பல்வேறு புள்ளி விவரங்களுடன் இருக்கும்

இடிந்தகரை மக்கள் கையிலிருப்பது
மீன் வலை மட்டுமில்லை
உலக வலைத்தளங்களும் கூட....

இப்போராட்டம் அவர்களுக்கு மட்டும் இல்லை
எமக்கும் எம் சந்ததிக்கும் சேர்த்து அல்லவா போராடுகிறார்கள் என்று
நினைக்கும்போது எங்களால்........
முடிந்தவரை துணை நிற்போம்…

இடிந்தகரை மக்களின் இடியாத மனதிற்கு.....

எழுதியவர் : இராஜேஷ் .பா (23-Sep-13, 11:39 am)
பார்வை : 123

சிறந்த கட்டுரைகள்

மேலே