விரதம்
உடல் வருத்திக்கொண்டேன்
உண்ணா நோன்பு கொண்டேன்
பசி என்ற மருந்தை நோகாமல்
புசித்து பார்த்தேன்
வழி வேண்டும் இறைவா - எனக்கு
வரம் தர வேண்டுமென்ற
வேண்டுதலோடு....
நிஜமாகவில்லை !
நிஜமாக நடக்கவில்லை !
நினைத்து பார்கிறேன் !!!
எனக்குமுன்
எத்துனை கோடி பேர் !!
பசி இருந்தும்
புசிக்க முடியாமல்...
வழி தேடி
வலியோடு .....
விளங்கியது இறைவா - நீ
விரதம் படைத்ததே - என் தோழனின் பசி
விளக்கவே !!