தண்ணீர் தண்ணீர்
தண்ணீர் தண்ணீர்
என்று புலம்பும் நாம்
செய்த பாவம் தான் என்னவோ?
வரப்பு உயர நீர் வேண்டும்
பயிர் செழிக்க நீர் அவசியம்
மனிதன் தாகம் தீர
அவனின் உடல் அழுக்கைப் போக்க
விலங்குகள் நிலை செயல் பட
அவைகளின் வாழ்வு நிலை பெற
பறவைகள் இனம் பெருக
தண்ணீர் மிக அவசியம்
இந்த அருமையான்
தேவ அன்பளிப்பை
நாம் புறம் தள்ளி
புறக்கணித்து சீரழித்து
அசுத்தப்படுத்தி நச்சரித்து
கொல்லாமல் கொன்று விட்டோம்
இன்று தண்ணீர் தண்ணீர் என்று
ஏங்குகிறோம் கண்ணீரோடு