என்ன கொடுமை சார் இது ?

நான்கு சுவருக்குள்
பேசி திறக்க தீர்க்க வேண்டிய
கணவன் மனைவி பிரச்சனையை

உலகமே பார்க்கும் படி
தொலைகாட்சியில் அம்பல படுத்தும்
அறிவு ஜீவிகள்

அதை தொகுத்து வழங்கும்
மகா மேதை

இதில் இடைவேளை வேறு


அடுத்தவர்கள் பிரச்சனையில்
ஆதாயம் தேடும்
கூட்டத்திற்கு மத்தியில்

அணு அணுவாய் செத்து
மடிகிறது

எங்களது கலாச்சாரமும்,
கணவன் மனைவி உறவுகளும்,
வாழ்க்கை என்னும் புனித
ஜீவனும்

எழுதியவர் : ந.சத்யா (24-Sep-13, 1:45 am)
பார்வை : 96

மேலே