கை விடாதே...

இயற்கையே
நீயும் என்னை கைவிட்டு விட்டாயே!

காரணத்தோடுதான் காரியம்எல்லாம் எனில்
என்னை வதைக்க காரணம்?

பயனற்றுப்போகத்தான் நான் எனில்
என்னை விதைக்க காரணம்?

உருவாக்கி உள்ளத்தை உண்டாக்கியதும் - நீ
எண்ணத்தை ஏக்கத்தை ஏற்படுத்தியதும் - நீ
எனில்
என்னை ஏமாளியாக்க காரணம்?

சுவாசிக்கும் முன்பே காற்று சூடாகிறது
காணும் முன்பே காட்சி கரைந்து போகிறது
பேசும் முன்பே வார்த்தைவிழுந்து வீணாகிறது
தொடும்முன்பே விரல் வீங்கிப்போகிறது

இயற்கையே...
ஆசை லட்சியத்தை
நெஞ்சில் சுமக்கச்சொல்லி - நீ
அமைதியாய் உறங்குகிறாய்.

எதையும் அறியும் அறிவைதந்து - நீ
எதுவும் தராமல் சென்றுவிட்டாய்.

பாசபந்த தளையை சுற்றிவிட்டு நீ மட்டும்
பறந்துஎங்கோ பாடுகின்றாய்.

இயற்கையே...
நீயும் என்னை கைவிட்டு விட்டாயே?!...
எனது நிலையை அழுது சொல்ல
இனி யாரிடம் செல்ல?!...

எழுதியவர் : அருள் ராம் (24-Sep-13, 11:55 am)
சேர்த்தது : arul ram
Tanglish : kai vidaathe
பார்வை : 58

மேலே