@@@ தனிமையில் என் துணையிவள்@@@

சிலநேரம் தனிமையில் சோகம்கொள்ள
என்சோகம் போக்கி மடியில்
சாய்த்து துயில்கொள்ளச் செய்யும்
=======தாய் =======

சிலநேரம் என் பிழைகளுக்காக
மண்டியிடச் செய்து மன்னித்து
மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்
=======சகோதரி=======

சிலநேரம் தோள்சாய்ந்து கதைப்பேசி
சிணுங்கலுடன் செல்ல சண்டையிட்டு
சிரித்து சமாதான மாக்கும்
=======தோழி=======

சிலநேரம் இனிமையாய் மனம்நுழைந்து
அன்பை பொழிந்து துள்ளிஎழும்
கடலலையென உரசி சுகம்தரும்
=======காதலி=======

சிலநேரம் இதமான தென்றலாய்வருடி
தேகம் சூடேற்றி மனதுக்குள்
மகிழ்ச்சியூட்டி தன்னை மறக்கச்செய்யும்
=======மனைவி =======

என் தனிமைகளில் இனிமைதர
வந்திடுவாள் இந்த வெண்பஞ்சு
வட்டமுக வார்ப்பில் வந்த
=======நிலாமகள்=======

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (26-Sep-13, 11:34 am)
பார்வை : 152

சிறந்த கவிதைகள்

மேலே