அனாதை குழந்தைத் தொட்டி

அனாதை குழந்தைத் தொட்டி

அழுது கொண்டே இருக்கிறது.....
ஒரு அனாதை
குழந்தை தொட்டி...
நான்
இன்னும் அனாதையாய்
இருந்ததில்லை என்று....

தாகத்திற்கு தண்ணீர்
குடித்தாற்போல
பிறக்கும் குழந்தகளே
இங்கு அதிகம் வருகின்றன...

ஒருபோதும் வந்ததில்லை,
கண்ணியமாய்
பிறந்த குழந்தைகள்.....

ஆண் பெண் பெதமின்றி
வீசி எறியப் படுகின்றன
பச்சிளங்குழந்தைகள்...

படுக்கும் முன்
சில பரதேசிகள்
யோசிப்பதில்லை
இது பாவமென்று....

இங்கு
ஒரு குப்பைத் தொட்டி
அழுது கொன்டே இருக்கிறது....
இது
யார் பெற்ற குழந்தென்று
தெரியாமலே......

எழுதியவர் : சிவானந்தம் (26-Sep-13, 11:34 am)
சேர்த்தது : சிவானந்தம்
பார்வை : 76

மேலே