அன்புத்தொல்லை.
அண்ணனும் இல்லை
தம்பியும் இல்லை.
உன்னிடம் சொல்ல
ஊறிடும் தொல்லை.
ஆரிடும் சொல்லி
ஆவதும் இல்லை.
பேரிடும் போதே
பிறந்தது சல்லை.
எண்ணிடு நீயே
இருக்குது கொல்லை.
கண்ணீரைக்கூட கடன்
சொன்னான் பிள்ளை.
உண்மைகள் இங்கு
உயிர் வாழவில்லை.
நன்மைகள் செய்தும்
நன்றிகள் இ்ல்லை.
நம்பிட வாழ்வில்
நட்பிலும் இல்லை.
கும்பிடத் தெய்வம்
கோவிலில் இல்லை.
நாடகம் ஏதும்
பாடங்கள் இல்லை.
நடிகன் எவனும்
நாயகன் இல்லை.
தலைவனின் வேடம்
தர்மத்தில் இல்லை.
கலையெனும் பேச்சில்
கர்மங்கள் இல்லை.
நடப்பது எதுவும்
நலமாக இல்லை.
கிடைப்பதன் செயலும்
கேள்வியில் இல்லை.
உழைப்பவன் கூடையில்
ஒன்றுமே இல்லை.
பிழைப்பவன் பேழையில்
கருணையே இல்லை.
நல்லவன் பக்கம்
நட்பே இல்லை.
வல்லவன் வெக்கம்
வரவில் இல்லை.
எல்லாமே பாடி
சொல்லாமலில்லை.
சொன்னதை யாரும்
கேட்பாரும் இல்லை.
யாரையும் நம்பி
பிறக்கவுமில்லை.
என்னை நானும்
இழக்கவுமில்லை.
அன்புக்கு எல்லை
அடியனுக்கில்லை.
வம்புகள் செய்தால்
வந்திடும் தொல்லை.
அன்புத் தொல்லை
அலுப்பதுமில்லை.
என்புடல் பிறர்க்கே
எனக்கே இல்லை.
கொ.பெ.பி.அய்யா.