மூன்றாவது கண்

"டக்", "டக்", "டக்"
சீரான
இடைவெளியில்
வெளிப்படும் சத்தம்.

சில நேரங்களில்
தவறிப்போய்
"சலக்" "சலக்", என
நீரில் தட்டுப்படும்
ஜல சத்தம் .

இன்னும்
சில நேரங்களில்
சக மனிதர்கள்
மீதே
பாதை தவறிப் போய்
இடறி பட்டு
மீண்டும்
சரி செய்யப் படுகிறது
"டக்" "டக்" சத்தம் .

மிக வேக
தொடர்வண்டியிலும்
பக்குவமாய் ஏறி
பத்திரமாய்
வீடு திரும்புதலாகிறது
எந்த ஒரு பார்வையுமற்று.

பிறவிக் குருடனின்
வழிகாட்டுதலில்
கைக்குச்சியின்
நுனியில்
அவனது
மூன்றாவது கண்.

# பிறைநுதல்

எழுதியவர் : பிறைநுதல் (4-Jan-11, 1:24 pm)
சேர்த்தது : pirainudhal
பார்வை : 538

மேலே