@@@அமைதிக்கொள் மனமே அமைதிக்கொள்@@@

உணர்வுகள் உதாசனமாக உள்ளிருந்து வரும்
உணர்ச்சிகள் கொப்பளிக்க உறைந்து போகும்
உயிரையும் விட்டுவிட துணியும் நேரத்தில்
உள்ளம் கதறிஅழுது வாழ்வை வெறுக்கையில்
அமைதிக்கொள் ஆழ் மனமே அமைதிக்கொள்
அனைத்தும் நம் நன்மைக்கே அமைதிக்கொள்
உண்மை புரியாமல் உறவுகளும் உளருகிறதோ
உணராமல் கேள்வி கேட்கும் தருனமானதோ
உட்க்கார்ந்த இடத்தில் கண்ணீர் மழையோ
உச்சிமுதல் பாதம் வரை உணர்விழந்திட
அமைதிக்கொள் ஆழ் மனமே அமைதிக்கொள்
அனைத்தும் நம் நன்மைக்கே அமைதிக்கொள்
உலகின் காட்சியால் கண்கள் ரத்தக்கண்ணீரிட
உடனே பிடுங்கியெரிய தோன்றுதென்று கோவம்
உமிழ்ந்து ஆட்டம் ஆடும் அத்துனையையும்
உதைத்து எறிய துடிக்கும் மனநிலையில்
அமைதிக்கொள் ஆழ் மனமே அமைதிக்கொள்
அனைத்தும் நம் நன்மைக்கே அமைதிக்கொள்
உதிர்ந்த பூவாய் வதங்கி துடிக்கையில்
உதகவன் கொழுந்துவிட்டு எரியும் மனதில்
உசரிதம் முள்ளாய் குற்றி கிழித்திட
உடறுதலால் உடலழிவு தேடிடும் தருணம்
அமைதிக்கொள் ஆழ் மனமே அமைதிக்கொள்
அனைத்தும் நம் நன்மைக்கே அமைதிக்கொள்
உதடுகள் உதிர்க்கும் பொய்கள் கேட்கையில்
உயிர் துடிக்கும் அசம்பாவிதம் பார்க்கையில்
உதாசிக்கும் உன்னத நிகழ்வை நினைக்கையில்
உவாதைக் கொண்டு மரணம் தேடுகையில்
அமைதிக்கொள் ஆழ் மனமே அமைதிக்கொள்
அனைத்தும் நம் நன்மைக்கே அமைதிக்கொள்
உற்றநேரம் உதவுபவரிடம் நம்பி ஏமாறுகையில்
உயிரானவர் உயிர் எடுக்கும் நிலையில்
உள்ளம் நொந்து ஆசைகோபம் பொறாமை
உணர்வில் கலந்து சினமாய் கொன்றிட
அமைதிக்கொள் ஆழ் மனமே அமைதிக்கொள்
அனைத்தும் நம் நன்மைக்கே அமைதிக்கொள்
உலகம் உருண்டு கொண்டிருக்க வாழும்
உனக்கான வாழ்வில் இன்பம் துன்பம்
உடனுக்குடன் வந்து போகும் ஆனாலும்
உனக்கான விடியல் வரும் விரைவிலென
அமைதிக்கொள் ஆழ் மனமே அமைதிக்கொள்
அனைத்தும் நம் நன்மைக்கே அமைதிக்கொள்
=====(உதகவன் - நெருப்பு
=====உசரிதம் -நெருஞ்சில்
=====உதறுதல் - சினத்தல்
=====உடலழிவு - மரணம்
=====உவாதை -வேதனை)
...கவியாழினி...