என் உயிர் என்றும் உன்னருகில் 555
உயிரானவளே...
என்னை கசக்கி
தூக்கி எரிய...
நான் காகிதத்தில்
வரைந்த மலர் அல்ல...
மணம் இல்லாமல்
போவதற்கு...
மனம் ஒன்று
இல்லாமல் போவதற்கு...
பாறை இல்லை நான்...
உன்னை வேண்டாமென்று
சொல்லிவிட...
வார்த்தைகள்
இல்லை...
எளிதாக நீ
நினைத்துவிட்டாய்...
மறித்துவிடவும் சம்மதம்
கேட்டவன் உன்னிடத்தில்...
வாழ்வில் சந்தோசம்
காணாதவன்...
முதல் முறை
கண்டேன் உன்னால்...
இன்று வரை கிடைத்த
அவமானங்கள்...
என் வாழ்வில்
உயிரென நினைக்கும்...
உன்னிடத்தில்
வேண்டாமென்று நினைத்தது...
என் தவறுதான்...
ஒருமுறை அவமானம்
எல்லோர் வாழ்விலும் உண்டு...
வாழ்க்கை முழுவதும்
அவமானம் என்றால்...
யாரிடம் கேட்பது
அன்பினை...
எனக்கு நானே
கொடுக்கும் வலிகள்...
எனக்கு கிடைக்கும்
வலிகளும் பரிசும் நினைத்து...
சில நேரங்களில்
சந்தோசமே...
என் உடலில் உள்ள
தசையினை நரம்பினை
குருதியை கூட...
என்னை
ஏளனமாகவே பார்க்கிறது...
உறக்கமின்றி அலையும்
நான் தினம் தினம்...
மனம் உன்னை
மறுத்ததும் இல்லை...
உடல் உன்னை
உதறியதும் இல்லை...
உயிர் என்றும்
உன்னருகில்...
என்னுயிர் என்றும்
உன்னருகில்.....