இளமை போகுதடி - என் இளமை போகுதடி

இளமை போகுதடி -என் இளமை போகுதடி
எனையே நீ பிரிந்ததாலே .........
இளமை போகுதடி - என் இளமை போகுதடி ;

நான் பாடும் காதல் எனும் இளங்காற்று
பாடுகின்ற என் உயிர் பாட்டு ;கேட்கவில்லையா
உனக்குக் கேட்கவில்லையா ?

மணியோசை கேட்டோம் நாம்
மணல் வெளியில் நடந்தோம் நாம்
மொட்டான என் காதல் மலராகுமா ?
மலராகி என் வாழ்வில் மணம் வீசுமா ?

இளமை போகுதடி - என் இளமை போகுதடி
என் கண்கள் துடிக்கின்ற மீன் போலே
துடிக்குதம்மா ! என் மணம் துவளுதம்மா !

மயில் ஆட மழைத்துளியும் உருவாகுமோ !
பனிநீரில் தாமரையும் பூவாகுமோ !

இளமை போகுதடி - என் இளமை போகுதடி
எனை நீ பிரிந்ததாலே ...........
உன் மாமனவன் நிற்கின்ற நேரம்
அந்தி மாலை மலைச்சாரல் ஓரம் ;
காதலை சொல்லவும் கவிஞன் அங்கு இல்லை ;
நிழல் போல உன்னோடு நான் வரும் நேரம்
நெஞ்சினிலே முள்ளாகக் குத்துதடி
என் செய்வேன் நானும் ..........
இளமை போகுதடி - என் இளமை போகுதடி
எனை நீ பிரிந்ததாலே .........

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Sep-13, 9:57 pm)
பார்வை : 67

மேலே