மனதை மறைத்தாய்...!

கடந்து செல்கையில்
கண்டும் காணாத உன் கடைக் கண்பார்வை...!

ஆர்பரிக்கும் கூட்டத்திலும்...
அரைநொடியில் அடையாளம் கண்டாய்...!

ஒரு நாள் காணாவிடினும்...
நானறியாமல் விசாரித்தாய்
நம் கல்லூரித் தோழியிடம்...!

காதலின் அறிகுறி இவைதானென்று...
நண்பன் சொல்ல...

கையில் ரோஜா ஏந்தி...
கதாநாயகனாய் முன் நின்றேன்...!

துருவம் மாறிய பூமிப்பந்தாய்...
விசை மாறி நிலைகுலைத்தாய்...!

கண்ணீர் சிந்தி கடந்து சென்று...
என் பிஞ்சு நெஞ்சுடைத்தாய்...!

நேரில் வந்தால்...
அறிமுகமற்றவனாய் எனைப்பார்த்தாய்...!

எதனாலோ எனை வெறுத்தாய்...
சாதி சமயமா? சமநிலை பேதமா?

கண்களிலே காதல் கசிந்தாலும்...
பெண்ணே...!
என் காதல் ஏன் மறுத்தாய்...
மௌனத்தாழிட்டு...
மனதை ஏன் மறைத்தாய்...!

எழுதியவர் : ராஜதுரைமணிமேகலை (29-Sep-13, 9:26 pm)
பார்வை : 128

மேலே