வெள்ளை தேவதை !!!!

காலில் கடிதங்களை சுமந்து சென்ற
வெள்ளை நிற பூவோ நீ....
மனிதர்களின் மனங்களை இணைத்த
வெள்ளை தேவதையோ நீ....
மங்கைகள் கொஞ்சி விளையாடும்
வெள்ளைத் தாமரையோ நீ....
அன்னை தெரசா அளிக்கும் தூய அன்பின்
சின்னமோ நீ - ஆதலால்
தலைவர்கள் நடத்தும் சமாதான
நாடகத்தின் தலைவியோ நீ....
அழகிய வெள்ளைப் புறாவே....
என் வீட்டிற்கும் பறந்து சென்று அறிவிப்பாயாக...
எனது வருகையை!!!!

எழுதியவர் : buvana (30-Sep-13, 8:39 pm)
பார்வை : 403

மேலே