+ஒரு வரி அந்தாதி!+

நானுமொரு அந்தாதி எழுத வந்தேன்!

வந்ததினால் வகையாக மாட்டிக் கொண்டேன்!

கொண்ட புத்தி அத்தனையும் ஒருங்கிணைத்து

இணைத்துவைத்து யோசிக்க வழி கிடைத்து

கிடைத்ததெல்லாம் சொல்லாக்கி வரியும் ஆக்கி

ஆக்கி வைத்தேன் அந்தாதி என்றபேரில்

பேர் வருமோ இதனாலே மாண்புறுமோ

உறுப்பெறுமோ இந்தக்கவி நிலைப் பெறுமோ

பெற்றதனால் சிறப்பனைத்தும் தான் வருமோ

வருமென்று சொல்லுவோரின் தாள் பணிய

பணிந்தேயென் தமிழ்மொழியை நான் போற்றி

போற்றி போற்றி என்றுபுகழ் நான் பாடி

பாடி பாடி மகிழ்வுடனே தானாடி

ஆட்டமது உள்ளத்திற்கு மகிழ்ச்சி தர

தரமாட்டேன் இவை அனைத்தும் நானுனக்கு

உனக்குத்தான் தந்தேனே அந்தாதி நான்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (30-Sep-13, 8:42 pm)
பார்வை : 116

மேலே