+உனைப் பார்க்கத் தானோ+
உனைப் பின்தொடர்ந்து
====நானொரு வாலானேன்!
உன் பார்வைப்புயலில்
====பறக்கும் தாளானேன்!
பாறையின் இடுக்கில்
====சிக்கிய காலானேன்!
உனைப்பார்க்கத் தானோ
====நான் ஆளானேன்!
உனைச் சூரியனாய்எண்ணி
====சுற்றிடும் கோளானேன்!
காதல் வரம்கிடைக்க
====காத்திருந்து பாலானேன்!
கசங்கியே எரிந்ததால்
====பிஞ்சிட்ட நூலானேன்!
கண்ணீரில் தவிக்கும்
====ஏழையைப் போலானேன்!