மழை ஹைக்கூ கவிதைகள்
****மழை வேண்டி
ஒற்றைக்கால் தவம்
குளத்து நீரில் கொக்கு****
****நாளை மழை பெய்யுமாம்
இன்றே சொல்லிவிட்டது
எறும்புகளின் இடமாற்றம்****
****வறண்ட நிலமானது
மழை மேகம் இல்லாத
வானம்****
****ஏன் இவ்வளவு கோபம்
தாமைரை இலையில்
ஒட்டாத மழைத்துளி****
****மழை வரவில்லை
என்று ஏங்கியவர்கள் மழை வந்தவுடன்
ஓடி ஒளிந்தனர் நனைந்துவிடுவோம் என்று****
****மழை வெள்ளம் வந்தால்தான்
பார்க்க முடியும்
காகித கப்பல்களை****
****மழையில்லதபோதுதான் தனக்கு
கல்யாணம் பண்ணி வைப்பார்களாம்
கவலையில் தவளைகள்****
****கருமை நிற ஆடையை
கழற்றி எரிந்தது மேகங்கள்
மழைத்துளியாய்****
****இடி சத்தம் கூட இசைதான்
அருகில் விலாத வரை****
****மழை நின்ற பின்னும்
நனைந்தது மண்
ஆனந்த கண்ணீருடன் விவசாயி***
****சமபந்தி விருந்து
எல்லோருக்கும் சமாய்
விருந்துகொடுத்தது மழை****
****காகிதம் கப்பலானது
மழை வெள்ளத்தில்****
****தவளையின் இன்னிசைமழை
மழை நின்ற பின்புதான் தொடங்குமாம்****
****வங்ககடலில் கற்றலுத்ததாழ்வுநிலை
வருத்தத்தில் மீனவர்கள்
மகிழ்ச்சியில் விவசாயி****
****வானவில்லின் அடம்
மழை பெய்தால்தான்
வருமாம்****
****தொடர்மழையால்
நிறுத்தப்பட்டது
தவளை கல்யாணம்****