காலை வணக்கம்
காலை விடிந்ததும்
கதிரவன் ஒளி பட்டு
கவலைகள் மறந்திட்டு
களிப்புடனே வாழ்ந்திட்டு
காலம் கழிந்திடவே
ஞாலத்தில் சிறக்கவே
காலை வணக்கம்
உங்கள் நண்பனிடமிருந்து !
கடந்ததை நினையாமல்
செய்வதை வகுத்திட்டு
வருங்காலம் செழித்திடவே
வளமைக்கு வழிதேடி
நலமுடன் வாழ்ந்திடவே
அடுததவ்ரும் மகிழ்ந்திடவே
அன்பையும் அள்ளித்தந்து
பரிவையும் பரிசளித்து
பாசத்தைப் பொழிந்திட்டு
நேசமுடன் வாழ்ந்திடுக
என்றும் இவ்வுலகில் !
பழனி குமார்

