தாயின் மணிக்கொடி

நம் தேசியக்கொடி
எப்போது சந்தோஷத்தில் பறக்கும்?

தேசிய தினங்களில் அரசியல்வாதிகள்
ஏற்றும் போதா ?
தன் சகோதரனுக்கு தண்ணீர் கொடுக்காமல்,அவன்
மரணத்தை ரசிப்பவனும் தானே ஏற்றுகிறான்
அப்போது அது வறுமையில் பறக்கிறது.

அரசு அலுவலகங்களில் உச்சியில்
பறக்கும் போதா ?
அலுவலகத்தில் நடக்கும் கையூட்டு,ஊழல்களை
பார்த்து உள்ளே இரூக்க முடியாமல்
மாடியில் நின்று அவமானத்தில் தற்கொலை
எண்ணத்துடன் பறக்கிறது.

இன்றைய அரசியல்வாதிகளின் வண்டியின்
முன் பறக்கும் போதா?
வண்டியின் உள்ளே திருடன் இருக்கிறான்
இனிமேலும் அவனை தேர்ந்தெடுக்கதீர் என்று
வலமும் இடமும் வேண்டாம் என்று தலை
அசைத்து எச்சரிக்கையாய்
சைகை காட்டி பறக்கிறது.

போர் களத்திலே வென்று
வெற்றி வீரன் பறக்கச்செய்யும் போதாவுது
சந்தோஷத்தில் பறக்குமா ?
நம் தாயின் மணிக்கொடி.

இந்த மண்ணில் பிறந்த காந்தியே அஹிம்சையை
விரும்பும் போது,அவர் சிந்தனையில்
உதித்த கொடி மட்டும் சந்தோஷத்தில்
பறந்திடுமா என்ன ?
தன் என்னொரு புதல்வன் மாண்டு கிடக்கிறான்
என்று கருணையாய் பறக்கும்.

தூய அரசியல்வாதிகளின் இழப்பின்
போது எப்படி பறக்கும்?
தன்னை காக்க ஒரு மகனை பெற்ற தாய்
அவன் இழப்பின் போது துடிப்பதை போன்று
தன்னை காக்க வந்த மன்னின் மைந்தனை
இழக்கும் போது அரை கம்பத்தில்
துடித்து கதறி அழுது பறக்கும்.

ரானுவ வீரன் வீர மரணத்தின் போது
அங்கு எப்படி அது பறக்கும்.
அவர்களது உடலை கட்டிக்கொண்டு
அல்லவா அழுகிறது.

உலக அரங்கில் போட்டிகளில் தங்கம்
வெல்லும் போது
அடுத்த முறை பறப்போமா என
ஏக்கத்தில் பறக்கும்.

நம் தேசியக்கொடி
எப்போது சந்தோஷத்தில் பறக்கும்?
நாட்டுக்காக உயீர் நீத்த தியாகிகளின்
மூச்சிலும் தூய அன்புள்ள நாளைய
பாரதத்தின் தூண்களாகிய குழந்தைகளின்
கைகளிலும்,மார்பிலும் இருக்கும் போதே
சந்தோஷத்தில் பறக்கும்.


26.1.2013 அன்று மும்பையில்
ஒரு குழந்தையின் கைகளில் தேசியக்கொடியை
பார்த்தபோது தோன்றியவை.

எழுதியவர் : க.ஹேமநாதன் (1-Oct-13, 3:10 am)
பார்வை : 473

மேலே