நெஞ்சக் கதவினை மெல்லத் திறந்தாய்

நெஞ்சக் கதவினை மெல்லத் திறந்தாய்நீ
மஞ்சள் நிலாவானில் மௌனமாய்ப்பார்க் கும்போது
அந்திவானம் மெல்ல அழகாய் கவிந்தது
சந்ரோ தயமாய்வந் தாய்

----இருவிகற்ப இன்னிசை வெண்பா

நெஞ்சக் கதவினை மெல்லத் திறந்தாய்நீ
மஞ்சள் நிலாமௌன மாய்ப்பார்க்க -- செஞ்சசுடர்
அந்திவானம் மெல்ல அழகாய் கவிந்தது
சந்ரோ தயமாய்வந் தாய்

--- இரு விகற்ப நேரிசை வெண்பா-

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-24, 5:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே