மாற்றத்தில் மாறிவிடாதீர்கள்

கடந்து வந்த பாதைகள்
களவுபோய் விட்டன...
எட்டிய இலக்கோ
அடியோடு மாற்றிவிட்டது
அவனை...

வரலாறு படைக்க முன்னேறியவன்
இறுதியில் மறந்தான்
அவன் வரலாற்றை

கடந்தகால வாழ்க்கை
கசக்கிறதாம்...
அவன் உணர்வானா
கசந்த காய்தான்
இறுதியில் கனியாக மாறுமென்று

காரணம் கேட்டால்
கட்டு கட்டாய் அடுக்குகிறான்
காரணங்களை...
அவனிடமுள்ள பணத்தைப்போல

நண்பா!
பணத்தில் துக்கத்தை
மறந்தவர்கள் மத்தியில்
உன் தூக்கத்தை
தொலைத்துவிட்டாயே...
இப்போது புரிகிறதா..?
பணம் பத்தும் செய்யும்

என் நண்பர்களே!
மாற்றங்களை
உங்கள் வாழ்வில்
ஏற்படுத்துங்கள்...
நீங்கள் மாறிவிடாதீர்கள்

எழுதியவர் : ஆரியன் (2-Oct-13, 9:09 am)
சேர்த்தது : ஆரியன்
பார்வை : 108

மேலே