குடிகாரன் பேச்சு

குடிகாரன் ஒருவன் மதுபானக்
கடைக்கு வந்து ஐந்து கிளாஸ் குடித்தான்.
அவனுக்கு திருப்திஏற்படவில்லை.திரும்ப
நான்கு கிளாஸ் குடித்தான். அப்போதும்
அவனுக்கு சரியாக
இல்லை.அடுத்து மூன்று கிளாஸ் குடித்தான்.
எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.இன்னும்
இரண்டு கிளாஸ் கேட்டு குடித்தான்.
ஊ ..ஹூம்,கடைசியாக ஒரு கிளாஸ் வாங்கிக்
குடித்தான்.இப்போது போதை நன்றாக
ஏறி விட்டது.அவன் அங்கலாய்த்தான்,''என்ன
கொடுமைடா சாமி,ஐந்து கிளாஸ்
குடித்தபோது போதை வரவில்லை.
நான்குக்கும், மூன்றுக்கும் இரண்டுக்கும்
வரவில்லை.இப்போது ஒரே கிளாசில்
போதை வந்துவிட்டதே!என்ன சரக்கோ!''
************************
குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
உரை:
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன்
மதிப்பைப் பெற விரும்பாதவர்
வேண்டுமானால் அருந்தலாம்.

நன்றி முகநூல்

எழுதியவர் : படித்தது (2-Oct-13, 5:45 pm)
பார்வை : 326

மேலே