வைகையில் ஓர் விடியல்

" வைகையில் ஓர் விடியல் "

நீ சிந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
விதி உன்னிடம் விளையாடுகிறது
நீ நிஜமென எண்ணும் அனைத்தும்
நிழலாகவே இருக்கிறது
உடலின் ஊனம் ஊரெல்லாம் உணரும்
உள்ளத்தின் ஊனம் உனக்கு மட்டுமே தெரியும்
நீ எதுகையிலும் மோனையிலும் எடுத்தியம்பினாலும்
ரசிக்க முடியாமல் ரணப்படுகிறது மனம்
உன் கண்ணீரை துடைக்க நீட்டிய கரம் கூட
காற்றை மட்டுமே கலைக்கிறது
ஒவ்வொரு முடிவும் அடுத்த
தொடக்கத்தின் அறிகுறியே!
பிறந்த போதே பல்லாயிரம் உயிரை வெற்றி கொண்டு
பிறந்த உனக்கு உன் மனதை வெற்றி கொள்ள தெரியவில்லையா?
நீ என்றும் நிழல் அல்ல,
நீ தான் விதை, நீதான் விருட்சம்
நீதான் உண்மை...நீதான் உலகம்
சுருட்டி வை உன் சோகங்களை ஓலைப்பாயில்
மூலையில் முடங்கிக்கிடக்கட்டும்
விழித்தெழு...வீறுகொள்..
வீசும் புயலும் தென்றலாகும் ஒருநாள்
உதவி கரத்தை எதிர்பாராமல்
உன் கரத்தை உதவி கரமாக்கு....
வானம் வசப்படும்...வாழ்வும் வர்ணம் பூசும்
வாழ்ந்திடு... வைகையில் விடியல் ஆரம்பிக்கின்றது.....




பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (2-Oct-13, 9:01 pm)
பார்வை : 199

சிறந்த கவிதைகள்

மேலே