குழந்தாய் அன்பு மதம் அறிவாயோ
குழந்தாய்
உன் புன்னகையில்
பிறக்கட்டும் அன்பு மதம் ......!
அப்பன்
வெட்டிய கிணர்
என்பதற்க்காக
உன்னை யாரும்
உப்பு தண்ணீரை
குடிக்க சொல்ல மாட்டோம் .......!
நீ
உப்பு நீரை
நல்ல நீராக்க
பிறந்தவன் ....!
நாங்கள் குட்டையில்
ஊறிய மட்டைகள்
நீயோ
தப்பி பிழைத்து
புதியதோர் அன்பு மதம்
படைக்கப்பிறந்தவன் ....!
பழையன கழிதலும்
புதியன வருதலும்
காலத்தின்
கட்டாயம் தானே ..?
இருப்பதையே
சகித்துக்கொண்டு
வாழ்ந்தால்
பைபிள் பிறந்திருக்குமா...?
குர்ரானும், பகவத் கீதையும்
நமக்கு
கிடைத்திருக்குமா ....?
அன்பை
விதைத்த
மதங்களில்
இன்று
ஆயுதங்களை
தொங்க விட்டது யார் ...?
மனிதனை
தேவனாக்க தானே
மதம்....?
மனிதனை
மனிதனாக்காமல்
எப்படி
தேவனாக்குவது ...?
குண்டூசி தானே
என்று
விழிகளில்
குத்திக்கொண்டாள்
குருதி வராதோ ...?
அன்பை விதை
அகிம்சையை
அறுவடை செய் ....!
எந்த மதம்
துப்பாக்கியை
துடையென பாடம் புகட்டியது ..?
போதி மரத்தடியில்
பூக்கள் கிடைக்கலாம்
ஆயுதங்கள் கிடைக்கலாமா...?
பூக்கள் மலர்ந்து
சிரிக்கலாம்
அயுதங்கள் வெடித்து
சிதறலாமா ......?
குழந்தாய்
நீயும் எங்களோடு
மத சாயங்களை
பூசி பயணிக்காதே ....!
நீ
புதியவன்
உன்னை சுற்றி
ஆயிரம்
மதங்களின்
குறியீடுகள் எதற்கு..?
அன்பென்னும்
ஒரே
குறியீட்டால்
மனிதனை மனிதனாக்கு...!
சாதி
மதங்களற்ற
அன்பு மதத்தை படை ..!
அன்பே மதம்
ஒளியே கடவுள்
என்ற
புதிய தத்துவத்தை விதை ...!
மூட பழக்கங்களை
மூட்டை கட்டு...!
பட்டினியால் வாடும்
வயிற்றுக்கு
சோறு வேண்டும்
அப்பொழுது தானே
நிமிர்ந்து
இறைவனை தொழ முடியும் ..?
குழந்தாய்
புரியவை
இதனை சமயவாதிகளுக்கு ....!
வாழும் பொழுது
வறுமையில் வாடிவிட்டு
இறந்த பின்
சொர்க்கத்துக்கு போய்
என்ன பயன் ...?
இதனையும்
மனிதனுக்கு
நீ புரியவை ...!
விடியல்
தொலைதூரத்தில் இல்லை
எட்டிய தூரத்தில்
தானே உள்ளது இதயம் ...!
கேள்விக்குறி
அகப்பைகளால்
கிளரிப்பாருங்கள்
உங்கள் சிந்தனைகளை ...!
குழந்தாய்
உன்
புதிய விடியலை
இறைவனும்
மதமும்
கொஞ்சம் எட்டி நின்று
வேடிக்கை பார்க்கட்டும் ...!
குழந்தையோடு
நீங்களும்
எழுந்து நில்லுங்கள்
குழந்தையும்
கடவுள் தானே
வழிநடத்தட்டும் ....!
சேர்ந்து நடப்போம்
புதிய
வரலாறு படைப்போம் ...!
அதோ ..
வானிலிருந்து
விழுகிறது அட்சதைகள்......!
அண்ணல் காந்தியும்
புத்தனும்,
ஏசு பெருமானும்
நபிகள் நாயகமும் ..
வரிசையாய் இன்னும்
சில வழி நடத்துனர்கள்
கைகளில் அட்சதையுடன் ....!
நீங்களும்
தயாராகுங்கள்
குழந்தையின்
பின்னால்
வழிநடப்போம் .....!
****************************************************************************
***************************************************************************