+நண்பனுக்கொன்றென்றால் முதலில் ஓடுவான்!+

கிடைக்கும் நேரத்தை
கிடப்பில் போடுவான்!
இல்லா வேஷத்தை
உடுப்பில் போடுவான்!

படிக்கும் போதெல்லாம்
கடலை போடுவான்!
பஸ்சில் போகையில்
தாளம் போடுவான்!

அழகைக் கண்டாலோ
சிக்னல் போடுவான்!
சிக்னலைத் தாண்டித்தான்
பிரேக்கைப் போடுவான்!

முகநூலில் பெண்ணிற்கு
ரெக்கொஸ்ட் போடுவான்!
பிடிக்காத செய்திக்கும்
லைக்கைப் போடுவான்!

நூறோ இருநூறோ
ஆட்டைய போடுவான்!
வீட்டிற்கே தெரியாமல்
ரூட்டையே மாத்துவான்!

ஏமாந்த பையனிடம்
மீட்டர் போடுவான்!
ஆங்கிலம் தெரிந்ததுபோல்
பீட்டர் போடுவான்!

பரிட்சை நேரத்தில்
பிட்டைத் தேடுவான்!
நண்பனுக் கொன்றென்றால்
முதலில் ஓடுவான்!

புதுப்புது ஸ்டைலை
நெட்டில் தேடுவான்!
நண்பனுக்காய் தோற்று
அரியர் போடுவான்!

அன்றுமுதல் இன்றுவரை
இவன் மாறாதவன்!
கல்லூரி மாணவனவன்
மிக ஜோரானவன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (5-Oct-13, 7:41 am)
பார்வை : 596

மேலே