மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
நமது நோக்கம் நல்லதாகவும்,
முயற்சி உண்மையானதாகவும் இருக்குமேயானால்
நமது விருப்பம் சரியாக நிறைவேறும்.
நடுவில் எதிர்பாராத நிகழ்ச்சிகள்
எத்தனையோ குறுக்கிடலாம்.
இதனால் நமது விருப்பம் நிறைவேறுவதில்
காலதாமதம் ஏற்படக்கூடிய பிரச்சினை உள்ளது.
ஒவ்வொரு விஷயமும் கட்டாயமாக,
உடனடியாக, நமக்கு சாதகமாகவே நிகழும்
என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.
ஒவ்வொரு விஷயத்திலும்
அவ்வப்பொழுது என்னென்ன நடைபெறுகிறதோ
அதை ஏற்றுக்கொள்வோம்.
எதிர்பான சூழ்நிலையில் நாம் கட்டுண்டால்,
பொறுமையாக இருந்து
காலம் மாறும் எனக் காத்திருப்போம்.....!!