எந்தன் உயிர் தோழியே 555
தோழியே...
நட்டு வச்ச
மலர் செடியில்...
முதல் மொட்டுவிட்ட
மலரே...
நீ மலர்ந்த இந்த நாளில்
மலர்ந்த மலர்கள் எல்லாம்...
என்றும் இல்லாமல் இன்று
அதிக புன்னகையுடன்...
நேற்று மலர்ந்த
மலர்களும்...
நாளை மலர இருக்கும்
மொட்டுகளும்...
இன்று மலர்ந்த புன்னகை
பூக்களை கண்டு...
மலர்கள் எல்லாம்
வருத்தம் கொள்ளுதடி...
மலர்ந்திருந்தால்...
உன் உதய நாளன்று
மலர்ந்திருக்க வேண்டும்...
மலர் முகம் கொண்ட
என் புன்னகை பூவே...
இனிய உதய நாள் நல்
வாழ்த்துகள்...
என் உயிர் தோழியே.....
(என் அன்பு தோழிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் தோழி தமிழ்.....)