என் தோழியின் (தோழனின்) பிரிவால்
தோழியாக வந்தாய்
இன்று தொலைதூரம் சென்றாயா?
என்னை தொலைத்து சென்றாயா?
என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டாய்
இன்று என்னை கரைத்தே போனாய்
உண்மைகூட ஒருவகையில்
உணர்ந்துகொள்ளலாம்போல,
இந்த பெண்மை மட்டும்
என்றும் எப்போதும் உணரவே முடியாது.
அழுகும்போதெல்லாம்
என்னை அழைத்துபேசினாய்,
இன்று சிரிக்கும்போது ஏன்
என்னை சிதறவிட்டாய்?
பேச நினைக்கும்போது நீ பேசு
என் பிரார்தனை எல்லாம்
உன் மகிழ்விற்காக மட்டும்
நீ அழைக்காமலே
நான் வந்திருக்கலாம். ஆனால்,
உன் முகவரியைக்கூட
மூடி மறைத்துவிட்டாய்.
(பிரிந்துபோன ஒவ்வொரு நண்பர்களுக்கும் சமர்ப்பணம் )