பிரியமான தோழி பிரியா ரஞ்சனிக்கு
ஏ ஏதென்ஸ் தோட்ட பூக்களே - இனிமேல்
உங்களை காண வரமாட்டேன்
என்னை தேடாதீர்கள்.....!
ஏ தெளிவாய் வீசும் தென்றலே - இனிமேல் உங்களை தேடி வரமாட்டேன்
நீங்கள் பதறாதீர்கள் .....!
ஏ ஏழிசை கொண்ட கீதமே - இனிமேல்
உங்களைப் பாடபோவதில்லை
என்னை மன்னியுங்கள்.....!
திருட போனவன்
திருந்தி வந்த மாதிரி.....!
ஏன் ? இந்த திடீர் மாற்றம்....!
என்கிறீர்களா ?
ஆம்...!
உங்கள் அத்தனை பேரின்
அடையாளமாய்
எனக்கொரு தோழி பிறந்திருக்கிறாள்....!
அதனால்தான் .....!
அவளைப் பற்றி சொல்லட்டுமா .....!
அவள்.....!
வார்த்தையால் தொகுக்காத
"கவிதை".....!
என் வாழ்க்கைக்கு கிடைத்த
"ஸ்பரிஷம்".....!
என் இதய பூவின் மீது
விழுந்த
ஒற்றைப் "பனித்துளி"....!
என் நட்பு வானத்தின்
"வானவில்".....!
என் சந்தோஷ அலைவரிசையின்
"தொகுப்பாளினி".....!
நீந்தி நீந்தி
அன்புக்கடலில் கண்டெடுத்த
"முத்து"......!
அவள் எப்பவுமே ஒரு கெத்து....!
அவளோடு
இருக்கின்ற தருணங்கள் எல்லாம்
எனக்கு ஜாலி.....!
அவள்தான்
என் தாய்க்கு பின்
நான் நேசிக்கும்
இரண்டாம் தோழி.....!
அவள் ஜனனம்
மௌனத்தின் ஆரம்பம் அல்ல......!
அது பேச்சுக்கு பேரரசு .....!
அவள்
பணி செய்யும் இடமோ
"நகராட்சி"
அவளுக்கு,
பகைவரையும் மதிக்கும் "மனசாட்சி"
அதனால்தான்
"கந்தர்வக்கோட்டை"
அவளது நகர் ஆச்சு.....!
மொத்தத்தில் .....!
என் வாழ்க்கையில்
ஏதோ ஒரு தருணத்தில்....!
"புயலாய்" வந்த
அவள் நட்பை ....!
கடற்கரையோரம் வீசும்
"காற்றைப்"போல....!
அதிகாலை நேரத்தில் அசைந்து வரும்
"தென்றல்" போல......!
என்றும் ....!
சுவாசித்துக்கொண்டே இருக்க
ஆசைப்படுகிறேன்.....!