மாப்பிள்ளை

"ம விலிருந்து மௌ வரை"

மணிக்கணக்காய் காத்திருந்தும்
மாப்பிள்ளை வராததால்,
மிரண்டுப் போன பெண்வீட்டார்
மீளாத் துயரில் ஆழ்ந்தனர்....
முழுமூச்சாக மாப்பிள்ளையைத் தேட
மூலைமுடுக்கெல்லாம் ஆள் அனுப்பினர்...
"மெய்தானா... மாப்பிள்ளையைக் காணோமா?"
மேற்கொண்டு என்னச் செய்வது என்று புரியாமல் வீட்டின்
மையத்தில் அனைவரும் ஒன்று கூடிய வேலையில்,
மொட்டை மாடியில் ஏதோ அரவம் கேட்டு திரும்பினால்,
மோகினிப்பேயைப் பார்த்த தினுசில் பேந்த பேந்த விழித்தபடி
மௌனமாக இறங்கி வந்துக் கொண்டிருந்தான் மாப்பிள்ளை...

பிறகுதான் விவரம் புரிந்தது... முதல்நாள் இரவு நண்பர்களின் வற்புறுத்தலால், பழக்கமில்லாத மதுவை அருந்தி விட்டிருந்ததால், போதையில் தூங்கியவனை எழுப்பாமல், நன்பர்கள் வீட்டிற்கு சென்று விட்டிருந்த படியால், தானே போதை தெளிந்து, நிலை புரிந்து தயக்கத்துடன் கீழே இறங்கியவனுக்கு நாலாபுறமும் அள்ளித் தெளிக்கப்பட்ட அர்ச்சனை அடுத்த ஜென்மம் வரை மறக்க முடியாத அளவிற்கு இருந்தது....

பெ.மகேஸ்வரி.

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (7-Oct-13, 8:10 am)
பார்வை : 113

மேலே