''நீ எப்படி இருக்க ''
ஒரு வார்த்தை சொல்லி விடு
''நீ எப்படி இருக்க '' என்று
உன் இதழ் விரித்து சொல்லும்
உன் மொழியைக் கேட்க
காத்திருக்கிறது
என் செவி மடல்கள் !
உன் நலமே என் நலம்
அதுவே நான் செய்த பாக்கியம்
உண்மை உரைத்திடு
என் தோழனே !
உலகில் வாழ்ந்திடு
புகழோடு நிரந்தரமாய்
அதுவே போதும்
என் உயிர் உள்ள வரைக்கும் ...!
என் கண்களில் பெருகும்
கண்ணீர் உனைக் காப்பாற்றும்
நீ சொல்லாத கதையையும்
சொல்லாத சோகத்தையும் கேட்டு
மனம் பதைக்கும் கண்ணீரோடு
கடவுளிடம் வேண்டியே ...!
என்னையும் அழைத்துக் கொள்
இறைவா..என் தோழனோடு
என மண்டியிட்டு வேண்டிக் கொண்டு
இன்றும் எப்போதும் என் உயிர் உள்ள
வரைக்கும் கெஞ்சுவேன் அணையா
விளக்கின் ஒளிமுன்னே...!