புரிந்துகொள்ளாத மனம்

நான்...
கண்டவுடன்
காதல் கொண்டவனும் அல்ல...
அலசி ஆராய்ந்துப் பின்
காதலித்தவனும் அல்ல...

ஈர்ப்பின் மத்தியில்
தொலைந்தவனும் அல்ல...
காமத்தை மட்டும் நேசிக்கும்
காமுகனும் அல்ல...

சதையை மட்டும் விரும்பியிருந்தால்
நான் காதலனாக இருந்திருக்கமாட்டேன்
கசாப் கடைகாரனாகியிருப்பேன்...

பொழுதுபோக்கிற்காக காதலித்திருந்தால்
ஒருபோதும் இழந்திருக்காது
என் கண்கள்
கண்ணீர்த் துளிகளை...

என் ஞாபகங்களில்
உன் நினைவுகளை தொலைத்திருந்தால்
என் உடல் எடையின்
ஒரு பாதியை
நான் இழந்திருக்க மாட்டேன்...

பெண்ணே!
உன் நினைவுகளில்
என் நினைவுகளை புதைத்ததுண்டா???
அல்லது..,
என்னில் ஒருமுறையாவது
நீ வாழ்ந்ததுண்டா..?

பிறகெப்படிச் சொல்கிறாய்
என் காதல் பொய்யென்று...

உன் மனதில் பதிந்திருக்கும்
காதலுக்கான அர்த்தங்களை கூறிவிடு
அதுபோலவும் மாறிவிடுகிறேன்
ஏனென்றால் என் காதல் நிஜம்...

தயவுசெய்து
இன்னொருமுறை கூறாதே
என் காதல் பொய்யென்று...

எழுதியவர் : ஆரியன் (7-Oct-13, 6:06 pm)
சேர்த்தது : ஆரியன்
பார்வை : 92

மேலே