தகர்க்க முடியாத மௌனங்கள்

வார்த்தைகளை தொலைத்த
வாலிபனாய்
காதல்மேடை ஏறியவன் நான்...

மௌனத்தின்
ஆயுதம் கொண்டு
அவள் செவிகளை என்னால்
துளைக்க முடியவில்லை...

அவளுக்காக
எழுதிய கவிதைகளோ
இதோ!
இதைப்போன்ற
வெள்ளைக் காகிதத்தில்
கேட்பாரற்ற அனாதைப் பிள்ளையாய்
பரிதவித்துக்கொண்டிருக்கிறது...

கசக்கிப் பிழிந்த ஆடையாகவும்...
மழையில் நனைந்த காகிதமாகவும்...
என் நிலமை...

இருந்தும்,,,
ஒவ்வொரு முறையும் எழுகிறேன்
இன்றாவது
என் மௌனங்கள்
மொழி திறக்கும் என்று...
ஆனால்,
வெற்றி இன்னும் வசப்படவில்லை...

வெற்றி என்னை
கைவிட்டதை உணர்கிறேன்...
ஆனால்,
நான் அதை விடவில்லை

ஒவ்வொரு முறையும்
என் மௌனத்துடன் போர்த்தொடுப்பேன்...
அவள் மனதை
வசப்படுத்த அல்ல,
அவளிடம் வசப்பட்ட
என் மனதைச் சொல்ல...

எழுதியவர் : ஆரியன் (7-Oct-13, 3:46 pm)
பார்வை : 118

மேலே