கனவுதேசம்!
தெருவெங்கும் தமிழ் பெயர்!
தென்றலிலும் தமிழ் ராகம்!
கோபுரம் தீண்டும் மேகம்கூட
கொஞ்சும் வீதிகளில்!
நதிகள் நீந்தும் நீர்ப்பறவைகள்
நகர்வலம் வந்து நடனமிடும்!
மாவிலை தோரணமும்
மஞ்சள் குங்குமமும்
மண் குடில்களையும்
மாளிகைஎன காட்டிடும்!
போதைகள் அற்ற மண்ணில்
மேதைகள் தோன்றி தமிழுக்கு
மேன்மைகள் சேர்ந்திடும்!
காகமும் பருந்தும் தங்கள்
கொடும்பகை மறந்தே
கைகொர்த்துஆடிடுமே!
தென்றல்காற்றும் திசைகள் சென்று
தேன் சுமந்து வந்து
தெருவினில் தெளித்திடுமே!
தேவாரமும் திருவாசகமும்
தினம் தினம் ஒலிபெருக்கியில்
திகட்டாமல் ஒலித்திடுமே!