பிரார்த்தனை

கடவுளை தரிசிக்க கோவிலுக்கு சென்றேன்.

கூட்டம் அலைமோதியது. கோவிலோ சிறியது.

சன்னதியின் முன்னால் இரும்பினாலான கம்பிகள் போட்டிருந்தன.

அதன் ஒருபுரம் ஆண்கள், மற்றொருபுரம் பெண்கள் என வரிசையில் சென்று தரிசிக்க.

கடவுளுக்கு தீப ஆராதனை காண்பிக்கும்போது கண்குளிரகண்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு, மனம் உருக பிரார்த்தனை செய்தால், நாம் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாக பக்தர்கள் மனம் நம்பும். அது இயற்கை.

அதிலும் போடப்பட்ட கம்பிகளுக்கு அருகே நின்று இருபவர்கள் மட்டும் தான், ஆண்டவனை அருகில் தரிசிக்க வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டு ஆண்டவனை தரிசிக்க தங்களுக்கு வாய்பு எப்பொழுது வரும் என நினைத்துக்கொண்டு ஏங்குபவர்களும் உண்டு.
அவர்களுக்கு வாய்ப்பு வரும்பொழுது தீப ஆராதனை முடிந்திருக்கும். பல பக்தர்கள் கூட்டம் மிகுதியால் அர்ச்சகர் கொடுக்கும் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு, இருந்த இடத்திலேயே ஆண்டவனை நினைத்துக்கொண்டு கை கூப்பி வணங்கி விட்டு ஆண்டவனை தரிசிக்க முடியாமலேயே திரும்பி சென்று விடுவார்கள்.

கர்ப்ப கிரஹத்தில் நின்று கொண்டு பக்தர்களின் இந்த மன ஓட்டத்தையும், செயல்களையும் தெளிவாக தெரிந்து கொண்ட இறைவன், தனக்குள்ளே இவ்வாறு நினைத்துக்கொண்டான்.

எங்கும், எதிலும் நான் இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டும், ஆலயங்களில் இருக்கும் என்னை காண நீங்கள் வருவதும், பிறகு தரிசிக்க முடியவில்லையே என ஏங்குவதும் ஏன் ? எப்பொழுது உங்கள் பாதங்கள் கோவிலின் முதல் படியில் படுகிறதோ, அக்கணமே, என் ஆசியும், அருளும், உங்களுக்கு சேர்ந்து விடுவதும், உங்கள் பிரார்த்தனைகளை நான் புரிந்து கொண்டதற்கான அறிகுறிகள் தான் என்பதை நீங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை ?

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (10-Oct-13, 10:41 am)
Tanglish : pirarththanai
பார்வை : 89

மேலே