புரிந்தவர் சிலர் தொடர்ந்தவர் சிலர்

பொழுது போகவில்லையென்றா
அவள் புன்னகை புரிந்தாள்
பொழுது மாலை என்பதால் !
அந்திவானின் அழகிய சிகப்பு
அடிக்கோடிட்டுக் காட்டும்
அந்தப் புன்னகை வரியை
புரிந்தவர் சிலர் தொடர்ந்தவர் சிலர்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (11-Oct-13, 8:34 am)
பார்வை : 159

மேலே