பரிணாமங்கள்
வாழ்க்கை பாதயில் எத்தனை மாற்றங்கள்
வளர்ச்சியில் எத்தனை பரிணாமங்கள்!
கண் போன பாதை பார்த்து,
கால் போன போக்கில் நடந்தான்!
கிடைத்ததை அடித்து,
அடித்ததை உரித்து,
உரித்ததை உடுத்தி,
உதறியதை உண்டான்!
உண்ட இடத்தில் உறங்கி,
குளிரென்று தெரிந்து,
சிக்கிமுக்கி தேய்த்து
தீயொன்று கண்டான்!
பச்சையை வேவித்து,
பசியதை போக்கி,
குச்சிக்ளை தீட்டி,
ஆயுதங்கள் செய்தான்!
படுகைகள் கண்டு,
பக்குவங்கள் செய்து,
விதைகளை விதைத்து,
விவசாயம் செய்தான்!
குளிருக்கும் வெயிலுக்கும்,
மழைக்கும் பயந்து,
மாடங்கள் அமைத்து,
மனமொத்து வாழ்ந்தான்,
துகில்கள் செய்து,
துன்னல்கள் அமைத்து,
மானத்தை மறைத்து,
மகிழ்ச்சியாய் வாழ்ந்தான்!
இரும்பை உருக்கி,
ஆயுதங்கள் செய்து,
அறிவை பெருக்கி,
ஆலைகள் செய்தான்!
ஈருடல் ஓருயிராய்,
இரண்டறக் கலந்து,
ஒருவனுக்கு ஒருத்தியாய்,
ஒப்பற்று வாழ்ந்தன்!