அரும் தமிழின் அழகிய வடிவங்கள்
தமிழினைப் பழகிட
வீசிய காற்று
மென்மையை பழகி
தென்றலாய் அங்கே....!
தமிழினை பேசிட
விரும்பிய மவுனம்
முட்டைகள் பொரிந்தே
குயிலென அங்கே.......!
தமிழினைப் பாடிட
வேண்டிய பனித்துளி
தாவுது மழையால்
நீரோடை அங்கே...!
அழகெலாம் தமிழே
அமுததும் தமிழே
ஆண்டவன் எழிலே
அது தமிழ் வடிவே........!