வாழ்கையெனும் இன்பத்தேன் கார்த்திக்
புதியதோர் உலகம்
புறக்கணிக்காத உள்ளம்
புத்தியை புதிதாக்கும் சூழல்
சலவை செய்த கைகள்
சாவுக்கு அஞ்சிடாத கண்கள்
சத்தியத்திற்கு அலையும் கால்கள்
தெவிட்டாத இன்பம்
இப்படி எத்தனையோ கற்பனைகள்
ஏற்றி வாழ்ந்திருப்பாய்
அனைத்தும் அரங்கேறியதா
அரங்கேறினாலும்
அரங்கேற்றம் அரைநொடியில்
அணைந்திருக்குமே ?
எங்கெல்லாம் செல்கிறாயோ
அங்கெல்லாம் சிக்கல்களின்
சிதைந்த சங்கீதம் இசைந்துகொண்டே
இருக்கும் !!!!
உன்னை புதுபித்துகொள்ள முற்பட்டால்
புதுப்பித்தலில் நீ காணமல் போவாய்
புதுப்பித்தல் என்ற பெயரில்
எத்தனை முறை நீ
வாழ்கையை இழப்பாய் !!!!
இழந்துகொண்டே இருந்தால்
எப்போது இன்பத்தை அனுபவிப்பாய்?
ஏற்றுகொள்வதில் சில சிக்கல்
இருந்தாலும்
ஏற்காமல் சிக்கலை சந்திக்கவே
முடியாது !!!!
ஆகவே
எழுந்திரு
எதிர்த்து நின்றால்
உடைவது உறுதி
சிரித்துகொண்டே
வாழ்கையில்
போராட கற்றுகொள்!!!!
வாழ்கையின் ஓட்டத்தில்
எதிர்நீச்சலிடுவதை விட
ஓட்டத்திற்கு தகுந்தார்
போல நம்மை
தக்கவைத்துகொள்வதே
புத்திசாலித்தனம்
எப்போதெல்லாம் உன்னை
தக்கவைத்துகொள்கிறாயோ
அப்போதெல்லாம் வாழ்கையின்
இன்பத்தேன் உன்னால்
சுவைக்கபட்டுகொண்டே இருக்கும் !!!!
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்