+உண்டா உண்டா உண்டா+
பயனுண்டா
விருந்தால் பயனுண்டா
விருந்துண்டு பின்
அல்லல்பட்டு மருந்துண்டால் பயனுண்டா
சுகமுண்டா
உறங்கினால் சுகமுண்டா
உறங்கி உறங்கி
உடல் உப்புவதால் சுகமுண்டா
வழியுண்டா
கடவுளால் வழியுண்டா
கடவுளின் பெயரால்
எழியோர்க்கு தீங்கிழைத்தால் வழியுண்டா
உயர்வுண்டா
வாழ்வில் உயர்வுண்டா
லஞ்சம்பெற்றும் வஞ்சம்செய்தும்
தான்மட்டும் பிழைத்தால் உயர்வுண்டா
திறனுண்டா
சிறந்த திறனுண்டா
திறனற்றோரை உயர்த்தாமல்
உதவாமல் உயர்வதால் திறனுண்டா
வளமுண்டா
நாட்டில் வளமுண்டா
விவசாயத்தை ஒழித்துவிட்டு
அந்நிலத்தால் வயிறுவளர்ப்போரால் வளமுண்டா